ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள்

Published On 2021-11-29 04:55 GMT   |   Update On 2021-11-29 08:24 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கும் முக்கிய விழாக்கள் குறித்த தகவல்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் (2022) 28-ந்தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ரிக் வேத பாராயணம், 2-ந்தேதி தன்வந்திரி ஜெயந்தி, 4-ந்தேதி பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின்போது யானை வாகன சேவையையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து தங்க காசு மாலையை திருச்சானூருக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

8-ந்தேதி திருச்சானூரில் நடக்கும் பஞ்சமி தீர்த்தத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து பத்மாவதி தாயார் கோவிலுக்கு மங்கல சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

12-ந்தேதி கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி திருமலையில் பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், 14-ந்தேதி கீதா ஜெயந்தி, 15-ந்தேதி சக்கர தீர்த்த முக்கோடி உற்சவம், 16-ந்தேதியில் இருந்து 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை தனுர் மாத கைங்கர்யம், 18-ந்தேதி தத்தா ஜெயந்தி, 19-ந்தேதி பவுர்ணமி கருட சேவை.

மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.
Tags:    

Similar News