செய்திகள்
சரத்குமார்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?- சரத்குமார் பேட்டி

Published On 2021-02-27 06:11 GMT   |   Update On 2021-02-27 06:11 GMT
மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தபின், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். சரத்குமாருடன் ஐஜேகே துணை பொதுச்செயலாளர் ரவிபாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கமலுடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறியதாவது:-

அதிமுக கூட்டணியில் இருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால் அங்கிருந்து விலகினேன்.

நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலிடம் பேசினேன். நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என கமல்ஹாசன் கூறியதால் சிறப்பான கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

நல்லவர்கள், ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி வைக்கப்படும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது பற்றி பேச திட்டமிட்டுள்ளோம்.

மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். பணத்தை வாங்கி கொண்டு வாக்கு அளிக்காதீர்கள். மாற்றத்திற்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News