உள்ளூர் செய்திகள்
காங்கிரஸ்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- தி.மு.க.வுடன் பேச்சு நடத்த மாவட்ட வாரியாக காங்கிரஸ் குழு

Published On 2022-01-21 10:52 GMT   |   Update On 2022-01-21 10:52 GMT
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை இடங்கள்? எந்தெந்த இடங்கள் என்பது பற்றி தி.மு.க.வினருடன் பேச்சு நடத்துவதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை தள்ளி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் வருகிற 24-ந்தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையில் 27-ந்தேதிக்குள் தேர்தல் அட்டவணை பட்டியலிடும்படி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

எனவே தேர்தல் தேதி 24-ந் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கட்சிகள் கூட்டணி பங்கீடு, இடங்கள் தேர்வு போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை இடங்கள்? எந்தெந்த இடங்கள் என்பது பற்றி தி.மு.க.வினருடன் பேச்சு நடத்துவதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கிறது.

மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள், மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.

இந்த பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலையில் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு பேச்சுவார்த்தை குழு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News