செய்திகள்
கொரோனா நிவாரண நிதி

கொரோனா நிவாரண நிதி ரூ.500 கோடியை தாண்டியது

Published On 2021-07-31 05:15 GMT   |   Update On 2021-07-31 05:15 GMT
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான உள் கட்டமைப்பு பணிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11.5.2021 அன்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்காக பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் இதற்கான செலவினங்கள் குறித்த விபரங்கள் பொது வெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இதுவரை நேரடியாகவும் இணைய வழி மூலமாகவும் தமிழக அரசுக்கு கிடைத்த கொரோனா நிவாரண நிதி ரூ.500 கோடியை தாண்டி விட்டது.

இந்த நிதியில் இருந்து இதுவரை ரூ.305 கோடிக்கு மேல் கொரோனா சம்பந்தப்பட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் இருந்து ரெயில்களில் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கும், உயிர் காக்கும் மருந்துகள் வாங்குவதற்கும், அதிகமாக நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான உள் கட்டமைப்பு பணிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News