செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் நமக்கு நாமே திட்டம் - பொதுமக்கள் பங்கு பெற வேண்டுகோள்

Published On 2021-10-06 09:27 GMT   |   Update On 2021-10-06 09:27 GMT
வெள்ளகோவில் நகராட்சியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து வெள்ளகோவில் நகராட்சியின் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் கூறியிருப்பதாவது:

வெள்ளகோவில் நகராட்சியில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக நகராட்சியில் பூங்கா அபிவிருத்திப் பணிகள், விளையாட்டுத் திடல், தெருவிளக்கு அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, மரங்கள் மற்றும் மரக்கன்றுகள் நடுவது, அரசு பள்ளிக்கூடம், மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் மேம்பாட்டு பணிகள். 

மேலும் மாதிரி நூலகம் கட்டுதல், அறிவுசார் கட்டிடம் கட்டுதல், சிறிய பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல், மண் சாலைகள், மெட்டல் சாலை, பழைய தார் சாலை ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் புதிய தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும் பொதுமக்கள் உபயோகப்படுத்தப்படும் வணிக வளாகங்கள், இதர கட்டிடங்கள், நகராட்சி பள்ளி கட்டிடங்களுக்கும், நூலகத்திற்கும் புதிய கணினி வழங்குதல், அங்கன்வாடி பொதுக்கழிப்பிடம், சமுதாய கழிப்பிடம் ஆகியவற்றை பராமரிக்கும் பணிகள், அரசு வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளுடன் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டில் மூன்றில் இரண்டு பங்கு அரசின் பங்களிப்புடனும், ஒரு பங்கு பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளது. 

அதன்படி இப்பணிகள் தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இப்பணிகளை மேற்கொள்ள கோரிக்கை மனுவினை ஆணையாளர், வெள்ளகோவில் நகராட்சி என்ற முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News