செய்திகள்
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் திரண்ட பொதுமக்கள்.

மார்க்கெட்-கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவியும் பொதுமக்கள்

Published On 2021-07-11 09:12 GMT   |   Update On 2021-07-11 09:12 GMT
தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவற்றில் அதிகாலை முதலே அதிக அளவிலான பொதுமக்கள் திரண்டனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கட்டுப்பாடுகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி திருப்பூரில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பொதுமக்கள் வியாபாரிகள் கடைபிடிக்கின்றனரா? என போலீசார் மற்றும் சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இன்று விடுமுறை என்பதால் வெளியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவற்றில் அதிகாலை முதலே அதிக அளவிலான பொதுமக்கள் திரண்டனர். மேலும், தங்களுக்கு தேவையான காய்கறிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர். அதேபோல், ரெயில்நிலையம், குமரன் ரோடு, புது மார்க்கெட் வீதி.

அவிநாசி சாலை ,பல்லடம் சாலையில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. முககவசம் அணிந்து வெளியில் வந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றுவதை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News