செய்திகள்
கோப்புபடம்

ஒரே நாளில் 110 பேருக்கு உறுதியானது - திருப்பூரில் கொரோனா திடீர் அதிகரிப்பால் அதிகாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2021-09-17 08:09 GMT   |   Update On 2021-09-17 08:09 GMT
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. அதன்படி நேற்று திடீரென அதிகரித்து 100-ஐ தாண்டியது. மாவட்டத்தில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தினசரி பாதிப்பு 80க்குள் பதிவாகி வந்த நிலையில் நேற்று 100ஐ தாண்டியது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாவட் டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 942 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பலி எண்ணிக்கை 944 ஆக உள்ளது. 

இந்தநிலையில் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 21 மாணவ-மாணவிகள், 5 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா திடீரென அதிகரித்ததையடுத்து மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மார்க்கெட்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர். 

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்று கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

கொரோனா கட்டுக்குள் வராமல் ஏறி இறங்கி வருவது திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News