செய்திகள்
விராட் கோலி

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்து முக்கிய சாதனைகள் படைக்க இருக்கும் விராட் கோலி

Published On 2021-08-01 11:14 GMT   |   Update On 2021-08-01 11:14 GMT
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி கேப்டன் பல சாதனைகள் படைக்க இருக்கிறார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. கடந்த முறை 1-4 எனத் தோல்வியடைந்த இந்திய அணி, தற்போது அதற்கு பதிலடி கொடுக்க இருக்கிறது.

கடந்த முறை இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடினார். அதேபோன்று தற்போதும் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் முக்கியமான ஐந்து சாதனைகளை படைக்க இருக்கிறார்.

விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 7547 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 453 ரன்கள் அடித்தால் 8 ஆயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். தற்போது வரை 92 போட்டிகளில் 27 சதம், 25 அரைசதம் அடித்துள்ளார். அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் வரிசையில் ஜஸ்டின் லாங்கர் (7696), இயன் பெல் (7727), மிக்கேல் ஆதர்டன் (7728) ஆகியோரை பின்னுக்கு தள்ள இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிராக 211 ரன்கள் அடித்தால், அந்த அணிக்கு எதிராக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். டிராவிட் 1950 ரன்கள் அடித்துள்ள நிலையில் அலஸ்டைர் குக் (இந்தியாவுக்கு எதிராக), சச்சின் தெண்டுல்கர் சாதனையுடன் இணைவார்.

சேவாக் டெஸ்ட் போட்டியில் 54 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். விராட் கோலி 10 இன்னிங்சில் 3 அரைசதத்திற்கு மேல் அடித்தால் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், லட்சுமண் சாதனையுடன் இணைய வாய்ப்புள்ளது.

27 சதம் அடித்துள்ள விராட் கோலி மேலும் ஒரு சதம் அடித்தால் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளுவார். இரண்டு சதம் அடித்தால், ஹசிம் அம்லா, மைக்கேல் கிளார்க் சாதனையை முறியடிப்பார்.

விராட் கோலியும், கிளைவ் லாய்டு தலா 36 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் விராட் கோலி கிளைவ் லாய்டு சாதனையை முறியடிப்பார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றால், 2007-ம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றிய பின்னர், இந்தியா சாதனைப் படைக்கும். கபில்தேவ், அஜித் வடேகர் தலைமையிலான டெஸ்ட் அணிகள் மட்டுமே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
Tags:    

Similar News