ஆன்மிகம்
உடுப்பி கிருஷ்ணன் கோவில்

உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் இன்று ரத்து

Published On 2020-08-11 05:56 GMT   |   Update On 2020-08-11 05:56 GMT
உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படாது என்றும், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்படும் என்று உடுப்பி கிருஷ்ண மட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) கிருஷ்ணர் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கிருஷ்ண ஜெயந்தி விழாவை எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த கோவில் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படாது என்றும், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்படும் என்று உடுப்பி கிருஷ்ண மட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News