வழிபாடு
கள்ளழகர்

கள்ளழகருக்கு 31-ந்தேதி தைலம் சாத்துபடி

Published On 2022-01-26 01:30 GMT   |   Update On 2022-01-25 07:29 GMT
இந்த மாதம் 31-ந் தேதி முதல் ஜூலை மாதம் 28-ந் தேதி வரை மூலவர் சுந்தரராஜ பெருமாள், தேவியர்களுக்கும், பூமாலை பரிவட்டம் சாத்துதல், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறாது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை தைமாத நிறை அமாவாசையன்று நடைபெறும் திருத்தைலக்காப்பு உற்சவம் சிறப்பு பெற்றதாகும். இதையொட்டி தை மாத அமாவாசை முதல் ஆடி மாத அமாவாசை வரை 6 மாதங்கள் திருத்தைலம் சாத்து படி நடைபெறும்.

இதையொட்டி (இந்த மாதம் 31-ந் தேதி முதல் ஜூலை மாதம் 28-ந் தேதி வரை) மூலவர் சுந்தரராச பெருமாள், தேவியர்களுக்கும், பூமாலை பரிவட்டம் சாத்துதல், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறாது. எனவே, பக்தர்கள் நித்தியப்படி பூமாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்து படி நிகழ்வுகள் அனைத்தும் உற்சவர் கள்ளழகர் பெருமாளுக்கும், தேவியர்களுக்கு மட்டுமே காணிக்கையாக செலுத்தலாம்.

எனவே பக்தர்கள் மூலவரை தரிசிக்க இயலாது. ஆனால் உற்சவரை வணங்கி அருள் பெற்று செல்லலாம். எனவே வருகின்ற 31-ந் தேதி (திங்கட்கிழமை) தை அமாவாசை அன்று பகல் 12.45 மணிக்கு மேல் 1-30 மணிக்குள் கோவிலில் மூலவருக்கு தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறுகிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் வௌியிட்டு உள்ளது.
Tags:    

Similar News