செய்திகள்
முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்

பாலியல் தொல்லை வழக்கு- முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மனு தள்ளுபடி

Published On 2020-08-25 08:59 GMT   |   Update On 2020-08-25 09:36 GMT
பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை:

நாகர்கோவிலில் 15 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக 4 நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதற்கு சிறுமியின் தாயாரே உடந்தையாக இருந்துள்ளார். இதுதொடர்பாக நாகர்கோவில் புத்தேரி பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் (வயது 60), இடலாக்குடி பகுதியை சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43) மற்றும் கோட்டார் பகுதியை சேர்ந்த கார்த்திக் (28) மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 5 பேரையும் கைது செய்ய மாவட்ட குற்ற பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் (பொறுப்பு) தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சிறுமியின் தாயார், பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவான முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.

முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

நாஞ்சில் முருகேசன் மனுவை வாபஸ் பெற அனுமதித்து நீதிபதி தள்ளுபடி செய்தார்.

சிறுமியின் வாழ்க்கையை அவரது தாயே சிதைத்துள்ளார் எனவும் உயர்நீதிமன்ற மதுர கிளை நீதிபதி பாரதிதாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News