செய்திகள்
திலிப் கோஷ்

மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ்

Published On 2021-02-26 18:06 GMT   |   Update On 2021-02-26 18:06 GMT
மேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறதுது.

இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது:-

திரிணமூல் காங்கிரஸின் பல உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜக-வில் சேர்ந்துள்ளனர். அக்கட்சியினரின் மன உறுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்டு பாஜக வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதற்கட்ட தேர்தல் மார்ச் 27-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ந்தேதியும், 3-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதியும், 4-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 10-ந்தேதியும், ஐந்தாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17-ந்தேதியும், 6-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22-ந்தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ந்தேதியும், 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ந்தேதியும் நடக்கிறது.
Tags:    

Similar News