உள்ளூர் செய்திகள்
ஏரி நீர் பாசன தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழை உதவி கலெக்டர் லட்சுமி வழங்கினார்.

விவசாயம் செழிக்க ஏரி நீர் பாசன சங்க தலைவர்கள் பாடுபட வேண்டும்- உதவி கலெக்டர் பேச்சு

Published On 2022-04-16 10:12 GMT   |   Update On 2022-04-16 10:12 GMT
விவசாயம் செழிக்க ஏரி நீர் பாசன சங்க தலைவர்கள் பாடுபட வேண்டும் என உதவி கலெக்டர் பேசினார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்-பட்டுள்ள ஏரி நீர் பாசன சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

திருப்பத்தூர் சப் கலெக்டர் லட்சுமி கலந்து கொண்டு பொதுப் பணித்துறை நீர்ப்பாசனத் துறை மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாம்பாறு நீர் அடிப்பகுதி, கோனேரிக் குப்பம் வெங்கட்ராமன் ஏரி, கம்பளி குப்பம் ஏரி பசலிகுட்டை ஏரி பாசன ஆயக்கட்டு தலைவர் ஆர்.ராஜாமணி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் ஆசைத்தம்பி, கண்ணன், சோமசுந்தரம், சம்பத், சான்றிதழ்களை வழங்கி பேசினார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏரி நீர் பாசன சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரும் விவசாயிகள் ஆகவே ஏரி நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணி எவ்வித பாகுபாடில்லாமல் மேற்கொள்ளவேண்டும் கிடைக்கப் பெரும் நிதியை உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் கிராமம் மற்றும் விவசாயம் செழிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.

நிகழ்ச்சிக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஆர் தசரதன் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார் டி. சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News