செய்திகள்
மெட்ரோ ரெயில்

பண்டிகை நாட்களையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

Published On 2020-10-23 03:11 GMT   |   Update On 2020-10-23 07:11 GMT
பண்டிகை நாட்கள் வருவதையொட்டி சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

பண்டிகை நாட்கள் வருவதையொட்டி சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 11 மணி வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு பதிலாக அதிகாலை 5½ மணியில் இருந்து இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது.

அதேபோல் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 11 மணி வரை ரெயில்கள் இயக்கப்படும். தொடர்ந்து வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு பதிலாக அதிகாலை 5½ மணியில் இருந்து இரவு 9 மணி வரை ரெயில்கள் இயக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News