ஆட்டோமொபைல்

டிவிஎஸ் அபாச்சி RR310 புதிய விலை

Published On 2018-04-06 11:31 GMT   |   Update On 2018-04-06 11:31 GMT
டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அபாச்சி RR310 விலை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த அபாச்சி RR310 விலை இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அபாச்சி RR310 தற்போதைய விலையில் இருந்து ரூ.8,000 முதல் ரூ.18,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அபாச்சி RR310 விலை ரூ.2.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கிய நிலையில், தற்சமயம் இதன் விலை ரூ.2.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய விலை தமிழ் நாடு, மகாராஷ்ட்ரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அபாச்சி RR310 ரூ.2.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அசாம், சண்டிகர், சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.2.23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



அபாச்சி RR 310 மாடலில் 4-ஸ்டிரோக், 4-வால்வ், சிங்கிள் சிலிண்டர், ரிவர்ஸ்-இன்க்லைன்டு 312சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 33.5 பி.எச்.பி பவர், 9700 ஆர்.பி.எம்., 27.3 என்.எம். பீக் டார்கியூ, 7700 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. சிறப்பான ஏரோடைனமிக் கொண்டிருப்பதால் அபாச்சி RR 310 அதிவேகமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைகளில் புதிய அபாச்சி RR 310 மணிக்கு 163 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பாக கட்டுப்படுத்தி, எளிமையாக இயக்க ஏதுவாக ஸ்ப்லிட் சேசிஸ் கொண்ட ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், உயர் ஏரோடைனமிக் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் அப்சைடு-டவுன் கியாபா ஃபோர்க், பின்புறம் கியாபா மோனோஷாக் அம்சமும் முன்பக்கம் 300 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க், பைபர் ரேடியல் கேலிப்பர் மற்றும் பின்புறம் 240 மில்லிமீட்டர் பின்புற டிஸ்க், டூயல் சேனல் ABS வசதிகள் நிறைந்த பிரேக்கிங் செய்யப்பட்டுள்ளது. 

அபாச்சி RR 310 மாடலில் செங்குத்தாக நிறுத்தப்பட்ட முழுமையான டிஜிட்டல் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்கும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லைட், எல்இடி டர்ன் சிக்னல்கள் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதால், ஃபுல் ஃபேரிங் தலைசிறந்த ஏரோடைனமிக் அம்சங்கள் நிறைந்துள்ளது.
Tags:    

Similar News