செய்திகள்
மாடுபிடி வீரர்கள் தடுத்து நிறுத்தம்

கருப்புப்பட்டை அணிந்து வேளாண் சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிய 2 மாடுபடி வீரர்கள் வெளியேற்றம்

Published On 2021-01-14 11:54 GMT   |   Update On 2021-01-14 11:54 GMT
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கருப்புப்பட்டை அணிந்து வேளாண் சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிய இரண்டு மாடுபிடி வீரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
புகழ் வாய்ந்த மாடுபிடி திருவிழாவான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 420 வீரர்கள் அவற்றை அடக்க பாய்ந்தனர்.

ஜல்லிக்கட்டின்போது திடீரென இரண்டு மாடுபிடி வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் போலீசார் உடனடியாக அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர்.

இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News