செய்திகள்
கோப்புபடம்.

வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.60 கோடியில் திருவுருவச்சிலை - முதல்வருக்கு பாராட்டு

Published On 2021-09-09 10:02 GMT   |   Update On 2021-09-09 10:19 GMT
ஆங்கிலேயனை தூக்கிலிட்ட முதல் சுதேச வீரர்கள் வரிசையில் வெங்கிடுபதி எத்தலப்பர் இருந்துள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில், ஆங்கிலேயரை தூக்கிலிட்ட முதல் சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்கார மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் திருவுருவச்சிலை அமைப்பதற்கு சட்டப்பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார்.

இந்தியர்களை தூக்கில் இட்டும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றவர்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் ஆங்கிலேயர் ஒருவருக்கே தூக்குத் தண்டனை நிறைவேற்றிய ஓர் குறுநில மன்னர் தளி பாளையக்கார மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர். 

ஆங்கிலேயனை தூக்கிலிட்ட முதல் சுதேச வீரர்கள் வரிசையில் தளி பாளையக்கார் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் இருந்துள்ளார். இதற்கு ஆதாரமாக திருமூர்த்தி அணை அருகே கல்வெட்டுக்கள் உள்ளது. 

எத்தலப்பருக்கு அரசு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் என 2014 ம் ஆண்டு முதல் தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலினை செய்து கடந்த 7-ந்தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனால் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் உடுமலை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News