ஆன்மிகம்
பட்டிவீரன்பட்டி அருகே பெரிய முத்தாலம்மன் கோவில் திருவிழா

பட்டிவீரன்பட்டி அருகே பெரிய முத்தாலம்மன் கோவில் திருவிழா

Published On 2020-10-19 06:39 GMT   |   Update On 2020-10-19 06:39 GMT
பட்டிவீரன்பட்டி அருகே பெரிய அய்யம்பாளையத்தில் பெரிய முத்தாலம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பொங்கல், மாவிளக்கு மற்றும் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
பட்டிவீரன்பட்டி அருகே பெரிய அய்யம்பாளையத்தில் பெரிய முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் திருவிழா நடத்த மதுரை ஐகோர்ட்டு தடை விதித்ததால் கடந்த 14-ந்தேதி திருவிழா நடைபெறவில்லை.

பின்னர் பெரிய முத்தாலம்மன் கோவில் திருவிழா நடத்த விதிக்கப்பட்ட தடை கடந்த 16-ந்தேதி விலக்கப்பட்டது. மேலும் திருவிழா நடத்துவது தொடர்பாக கோவில் தக்கார் முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோவில் தக்கார் சுரேஷ் திருவிழா நடத்த முயன்றார். அப்போது பாரம்பரியமான முறையில் திருவிழா நடத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், தாசில்தார் பவித்ரா, பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் குமரேசன் ஆகியோர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக தீர்வு ஏற்பட்டு நேற்று முன்தினம் திருவிழா தொடங்கியது. இதையடுத்து பொங்கல், மாவிளக்கு மற்றும் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். நேற்று இரவு 7 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரிய முத்தாலம்மன் பூஞ்சோலையை சென்றடைந்தது.
Tags:    

Similar News