செய்திகள்
பள்ளி மாணவிகள்

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2021-11-26 04:50 GMT   |   Update On 2021-11-26 04:50 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடலூர்:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

கடந்த 18-ந் தேதி விடிய விடிய பெய்த மழையால் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் 1.25 லட்சம் கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வந்ததால் வெள்ளம் கரையோர பகுதிகளில் உள்ள ஊருக்குள் புகுந்தது. அதோடு விளைநிலங்களையும் மழை வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக ஓய்ந்த நிலையில் நேற்று முதல் பரவலாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இந்த மழை விடிய விடிய நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.

தொடர்மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமறை அளித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக  கனமழை நீடித்து வருகிறது. இன்று காலையும் மழை பெய்ததால் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை  என்று மாவட்ட கலெக்டர் மோகன் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News