ஆன்மிகம்
அம்மன் வானகாட்சி மண்டபத்தில் இருந்து சொருகுபட்டை சப்பரத்தில் ஊர்வலமாக பூஞ்சோலைக்கு சென்றபோது எடுத்த படம்.

அகரம் கோவில் திருவிழா: பூஞ்சோலையில் எழுந்தருளிய முத்தாலம்மன்

Published On 2019-10-23 03:33 GMT   |   Update On 2019-10-23 03:33 GMT
அகரம் கோவில் திருவிழாவில் பூஞ்சோலையில் முத்தாலம்மன் எழுந்தருளினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்பை அடுத்த அகரத்தில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு திருவிழா பாரம்பரிய வழக்கப்படி அம்மனின் உத்தரவாக பல்லி சகுனம் கேட்டு திருவிழா நடத்தப்பட்டது. இதில் முக்கிய நிகழ்வான கண் திறப்பு வைபவத்தையொட்டி நேற்று முன்தினம் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு நள்ளிரவு வரை அருள்பாலித்த அம்மன் பு‌‌ஷ்ப விமானத்தில் உலா வந்து வானக்காட்சி மண்டபத்திற்கு வந்தார். அதனைத் தொடர்ந்து விடிய, விடிய வாணவேடிக்கை நடைபெற்றது.நேற்று மதியம் சொருகு பட்டை சப்பரத்தில் அம்மன் உலா வந்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் குடகனாற்றை கடந்து தாடிக்கொம்பு அருகே உள்ள பூஞ்சோலையில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News