செய்திகள்
கோப்புபடம்

தாய்லாந்தில் பிரதமர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்

Published On 2021-08-11 16:24 GMT   |   Update On 2021-08-11 16:24 GMT
கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்படாததாகக் கூறி தாய்லாந்தில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தாய்லாந்து:

தாய்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்ட போதும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பதவி விலகக்கோரி தலைநகர் பாங்காக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் பதவி விலகக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டத்தைக் கலைத்தனர்.



தாய்லாந்தில் இதுவரை 816,989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,588 பேர் தொற்று பாதிப்பினால் பலியாகியுள்ளனர்.

Tags:    

Similar News