செய்திகள்
சிபிஐ அலுவலகம்

நிலக்கரி மாபியா வழக்குகள்... 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

Published On 2020-11-28 06:54 GMT   |   Update On 2020-11-28 06:54 GMT
சட்டவிரோத நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று ஒரே சமயத்தில் சோதனை நடத்துகின்றனர்.
கொல்கத்தா:

சட்ட விரோத நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபடும் மாபியா கும்பல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கு வங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். 

கிட்டத்தட்ட 40 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத வர்த்தகம் மற்றும் நிலக்கரி கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட சிலருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை சிபிஐ மேற்கொள்ளும்.
Tags:    

Similar News