செய்திகள்
பசவராஜ் பொம்மையை, சரத்பவார் சந்தித்து பேசிய போது எடுத்த படம்.

பெங்களூருவில் பசவராஜ் பொம்மையுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு

Published On 2021-08-07 02:36 GMT   |   Update On 2021-08-07 02:36 GMT
பெங்களூருவில் வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பேசிய சரத்பவார், இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு :

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பணியாற்றி வருகிறார். அவரது மந்திரிசபையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இது மராட்டிய மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜனதாவுடன் தேசியவாத காங்கிரஸ் கைகோர்க்குமா? என்ற கேள்வி எழுந்தது. அதே தேசியவாத காங்கிரஸ் மறுத்தது.

இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி
பசவராஜ் பொம்மை
யை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, புதிய மந்திரிகள் ஆர்.அசோக், சுதாகர், அஸ்வத் நாராயண் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து பசவராஜ் பொம்மை வெளியிட்ட அறிக்கையில், "இரு மாநிலங்கள் இடையே உள்ள நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வெள்ள காலத்தில் இரு மாநிலங்களும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயல்படுவது குறித்தும் பேசினோம். நீர் பங்கீட்டு பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையை டெல்லியில் நடத்த தீர்மானிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News