செய்திகள்
கோப்புபடம்

பாரத் பந்த் போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் - விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Published On 2021-09-13 07:58 GMT   |   Update On 2021-09-13 11:09 GMT
ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க., அரசு நடத்திய தாக்குதலில் சுஜில்கஜால் என்ற விவசாயி உயிரிழந்துள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தியாகி பழனிசாமி நிலையத்தில் அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் (சிபிஐ)  சின்னசாமி தலைமை வகித்தார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார திருத்த மசோதவை எதிர்த்தும் தலைநகர் டெல்லியில் 9 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போராட்டகளத்தில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க., அரசு நடத்திய தாக்குதலில் சுஜில்கஜால் என்ற விவசாயி உயிரிழந்துள்ளார். 

விவசாயிகளை உதாசீனப்படுத்தும் மத்திய அரசை கண்டித்தும், வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) சார்பில் செப்டம்பர் 27-ந்தேதி பாரத் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Tags:    

Similar News