செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

ரூர்கியில் எடுக்கப்பட்ட வீடியோ அங்கு எடுக்கப்பட்டதாக வைரலாகி வருகிறது

Published On 2020-11-18 04:54 GMT   |   Update On 2020-11-18 04:54 GMT
ரூர்கியில் எடுக்கப்பட்ட வீடியோ அந்த மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மங்களூருவில் எடுக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் தீ மற்றும் புகைமூட்டம் நிறைந்த பகுதியில் சிலர் தரையில் வீழ்ந்து கிடக்கும் பகீர் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

மேலும் இந்த வீடியோ இனிப்பு கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்டது என்றும், இந்த சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே விபத்தில் சுமார் 40 பேர் காயமுற்றதாக கூறப்படுகிறது.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அந்த சம்பநவம் உத்தரகண்ட் மாநிலத்தின் மங்களூர் ரியாசத் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து இருப்பதும், மற்றவர்கள் காயத்தில் இருந்து மீண்டு வருவது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ளது போன்று வைரல் வீடியோ கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த சம்பவத்தில் 24 பேர் உயிரிழக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News