செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் விகிதம் 96 சதவீதமாக உயர்வு

Published On 2021-06-18 12:29 GMT   |   Update On 2021-06-18 12:29 GMT
ஜூன் 11 முதல் 17 வரை 513 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக தற்போது தொற்று வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கை  உயர்கிறது. தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 96 சதவீதமாக உள்ளது என்றார்.


‘மே 3ம் தேதி முதல் குணமடையும் விகிதம் உயர்ந்து வருகிறது. தற்போது 96 சதவீதமாக உள்ளது. ஜூன் 11 முதல் 17 வரை 513 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News