ஆன்மிகம்
மீனாட்சி அம்மன்

மீனாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி கோலாட்ட உற்சவம் வருகிற 4-ந்தேதி தொடக்கம்

Published On 2021-10-30 06:15 GMT   |   Update On 2021-10-30 06:15 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை, மாலை இருவேளையும் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றி பட்டையும் சாற்றுப்படி செய்யப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் வருகிற 4-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் தினமும் மீனாட்சி அம்மன் ஆடி வீதியில் வலம் வந்து அம்மன் சன்னதி கொலுச்சாவடியில் காட்சி அளிப்பர். முக்கிய நிகழ்வான கோ ரதத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி 6-ந் தேதியும், வெள்ளி ரிஷப வாகனத்தில் காட்சி தரும் நிகழ்ச்சி 9-ந் தேதியும் நடைபெறும்.

மேலும் வருகிற 4-ந் தேதி தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை, மாலை இருவேளையும் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசமும், வைரகிரீடமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றி பட்டையும் சாற்றுப்படி செய்யப்படும். முன்னதாக ஐப்பசி பூரம் வருகிற 31-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு ஏற்றி இறங்குதல் என்னும் சடங்குகள் நடந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News