ஆன்மிகம்
கங்கா ஸ்நானம்

தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்

Published On 2021-11-03 08:30 GMT   |   Update On 2021-11-03 08:30 GMT
ஐப்பசி மாத அமாவாசை அன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையானது வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி கங்கா ஸ்நானம், லட்சுமி குபேர பூஜை செய்வது தொடர்பாக ஜோதிடர் ஆனந்தி கூறியதாவது:-

இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு பண்டிகையும் கொண்டாடப்படுவதற்கு பல புராண சம்பவங்களும் வரலாற்று கதைகளும் இருக்கிறது.

ஐப்பசி மாத அமாவாசை அன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையானது வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மனதில் இருக்கும் கெட்ட எண்ண கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட இருளை நீக்க
தீபாவளி
கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்ரீ பிலவ வருடம் ஐப்பசி மாதம் 18-ம் நாள் (4.11.2021) வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. நாளை அதிகாலை 3 மணி - முதல் 6 மணிக்குள் வீட்டில் சுடு தண்ணீரில் கங்காதேவியை நினைத்து எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

பின்னர் வீட்டில் செய்த இனிப்பு உணவுகளை மகாலட்சுமி சமேத மகா விஷ்ணுவிற்கு வெற்றிலை பாக்கு பழத்துடன் படைக்க வேண்டும். வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றுவது சிறப்பு. புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி பூஜையில் வைக்க வேண்டும்.

பூஜை முடித்து புத்தாடை அணிய வேண்டும். அதன் பிறகு வீட்டுப் பெரியோர்களின் காலில் விழுந்து நல்லாசி பெற்ற பிறகு இஷ்ட குலதெய்வத்தை வணங்க வேண்டும். கேதார கவுரி விரதம் மற்றும் லட்சுமி குபேர பூஜை செய்யவும் உகந்த நாளாகும்.

கேதார கவுரி விரதம் கடை பிடிக்கும் வழக்கம் எல்லா குடும்பத்திற்கும் கிடையாது. பழக்கம் இல்லாதவர்கள் பார்வதி- பரமேஸ்வரரை மனதார வேண்டி இயன்றவரை அசைவ உணவை தவிர்த்து வழிபட்டால் தம்பதிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடு மறையும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள், விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.

பார்வதி பரமேஸ்வர வழிபாடு பிரிந்து வாழும் பல தம்பதியினரை ஒன்று சேர்க்கும். திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள் 21 சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம் தந்து வணங்கி ஆசி பெற சிவபார்வதி அருளால் விரைவில் திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடைபெறும்.

பொதுவாக கிழமை லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. அமாவாசை திதியும் வியாழக்கிழமையும் இணைந்த இந்த தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வது மிக மிக சிறப்பானதாகும்.

வாழ்வாதாரம் பெருக லட்சுமி குபேரருக்கு பச்சை குங்குமம் அர்ச்சனை செய்து வழிபட சுப மங்களம் உண்டாகும். லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் மாலை 5.30 - மணி முதல் 8 மணிவரை ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-ஜோதிடர் ஆனந்தி

Tags:    

Similar News