ஆன்மிகம்
கும்பகோணம் பொற்றாமரைக்குளம் நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

கும்பகோணம் சாரங்கபாணிசாமி கோவில் பொற்றாமரைக்குளம் நிரம்பியது: பக்தர்கள் மகிழ்ச்சி

Published On 2021-11-30 05:15 GMT   |   Update On 2021-11-30 05:15 GMT
வறண்டு காணப்பட்ட பொற்றாமரைக்குளத்தில் மழை நீரில் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த கோவிலின் மேற்கு பகுதியில் கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரைக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சாரங்கபாணிசாமி தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொற்றாமரைக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்பத்திருவிழா நடைபெறவில்லை.

கடந்த மகாமக திருவிழாவின் போது பொற்றாமரைக்குளம் தூர்வாரப்பட்டது. மேலும் காவிரி ஆற்றில் இருந்து பொற்றாமரைக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் பொற்றாமரைக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் வறண்டு காணப்பட்ட பொற்றாமரைக்குளத்தில் மழை நீரில் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே குளத்தில் நீரின் அளவை பராமரிக்க அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News