ஆன்மிகம்
அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் 1,008 பெண்கள் சரவிளக்கு பூஜை

அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் 1,008 பெண்கள் சரவிளக்கு பூஜை

Published On 2020-10-12 05:12 GMT   |   Update On 2020-10-12 05:12 GMT
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் திருஏடு வாசித்த பின்னர் 1,008 சரவிளக்கு ஏற்றிய பெண்கள், அய்யாவின் நாமத்தை சொல்லி பூஜை செய்து வழிபட்டனர்.
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி மாத 10 நாள் திருவிழாவில் 8-ம் நாள் திருவிழாவையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் செய்து, கோவிலுக்கு கொண்டு வந்த வித விதமான பலகாரங்கள், பழம், பூக்கள் என 1,008 சீர்வரிசை தட்டுகள் மூலம் அய்யாவுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.

தென் சென்னை மாவட்ட த.மா.கா. தலைவர் கொட்டிவாக்கம் ஏ.முருகன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவையொட்டி உகப்படிப்பு, உச்சிப்படிப்பு நடைபெற்றது. திருஏடு வாசித்த பின்னர் 1,008 சரவிளக்கு ஏற்றிய பெண்கள், அய்யாவின் நாமத்தை சொல்லி பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் செண்டைமேளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் அய்யா பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Tags:    

Similar News