ஆன்மிகம்
வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் ஆடித் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது.

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் ஆடித்திருவிழா தேரோட்டம் ரத்து

Published On 2021-08-13 03:29 GMT   |   Update On 2021-08-13 03:29 GMT
வீராம்பட்டினம் செங் கழுநீர் அம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடங்கியது. கொரோனாவால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக எளிமையான முறையில் திருவிழா நடந்தது. மேலும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுக்குட்பட்டு ஆடித்திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் மூலவருக்கு விசேஷ அபிஷேகங்களும் அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்து சபா மண்டபத்தில் பக்தர் களுக்கு தரிசனம் அளித்தார். இதில் கோவில் அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன், துணைத்தலைவர் உதய சங்கர், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் இருசப்பன், உறுப்பினர் முத்துவேல் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் மட்டுமே வலம் வருவார் என்றும் 20-ந் தேதி நடை பெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News