உடற்பயிற்சி
தியானம்

தியானத்தை எளிதாக பழக கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்

Published On 2022-04-22 04:21 GMT   |   Update On 2022-04-22 04:21 GMT
தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை வழிநடத்தவும் , கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை.
தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும்.   

1. நாம் வசிக்கின்ற வீட்டில் தியானம் செய்வதற்கு  நல்ல வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள்.
 
2. தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள். தியானத்தின் இடையில் தடைகள் ஏற்பட்டால் பிறர் மீது கோபம் கொள்ளாதீர்கள். தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள். அதே போல் மகிழ்ச்சியாக முடியுங்கள். தியானம் பழக ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் தடங்கல்கள் நிறைய வந்து உங்களை ஈடுபடவிடாமல் தடுக்கும்.

3. ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகக்கூடிய  உணவுகளை அளவோடு மற்றும் நேரத்தோடு எடுத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சியும் அவசியம் தேவை.

4.  தியானப்பாதையில் செல்லும்போது  அவர்களை வழிநடத்தவும் , கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை . தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக ஒருவர் இருக்கவேண்டும் .

5. மறதி , சோம்பல் , அதீத தூக்கம் ஆகிய மூன்று குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும். பதஞ்சலி சந்தேகம் , மனச்சலிப்பு , சோம்பல் , அலட்சியம் ,எழுச்சிகள், தவறாக புரிந்துக்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
 
6. அமர்வதற்கு உடலுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு மெத்தை அல்லது போர்வையை மடித்து பயன்படுத்தலாம். தியானம் பழகும் இடத்தை அடிக்கடி மாற்ற கூடாது. அமர்வதற்கு பயன்படுத்தும் போர்வைகளையும் மாற்றுதல் கூடாது. முடிந்தால் மனதுக்கு பிடித்த வாசனையுள்ள பத்தியை கொளுத்தி வையுங்கள்.

7. மிகுந்த மன உறுதியுடன் பழகுங்கள். காலையில் தியானம் செய்ய முடியாவிட்டால் மாலையில் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.  

8. ஓசைகள், குப்பைக்கூளங்கள் , தீயவர்கள் உடனிருக்கும் சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான் . முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள் . இல்லையெனில், தியானம் மனதில்தானே நடக்கின்றது என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு  எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள் .

9. நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது. எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க நினைப்பதில்லையோ , எந்த ஒரு நிமிடமும் நாம் சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல தியானமும் நம்  அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற வேண்டும் . ஆசனம், தியானம் , பிராணாயாமம் ஆகியவற்றை தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள்.

10. தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள். கண்ட நேரத்திலும் , கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள் . காலை 4 மணிக்கோ  அல்லது 6 மணிக்கோ , மாலை 6 மணிக்கோ அல்லது இரவு  8 மணிக்கோ தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
Tags:    

Similar News