தொழில்நுட்பச் செய்திகள்
எலான் மஸ்க்

புதிய சமூக வலைதளத்தை தொடங்கும் எலான் மஸ்க்?

Published On 2022-03-29 10:01 GMT   |   Update On 2022-03-29 10:01 GMT
கருத்து சுதந்திரத்தை பாதிக்காத வகையில் சமூக வலைதளங்கள் இயங்குகிறதா என எலான் மஸ்க் கேள்வி எழுப்பினார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களில் நிறுவனர் எலான்மஸ்க் புதிய சமூக வலைதளம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய சமூக வலைதளத்தை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். 

சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகம் இயங்குவதற்கு அடிப்படையான ஒன்று. ட்விட்டர் அத்தகைய சுதந்திரமான பேச்சுகளுக்கு அனுமதி அளிக்கிறதா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பலர் இல்லை என பதிவிட்டிருந்தனர். அதை தொடர்ந்து புதிய சமூக வலைதளத்தை எதிர்பார்க்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஒருவர் ஓபன் சோர்ஸ் தளத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும், அது வெளிப்படை தன்மையுடன் இயங்க வேண்டும் எனவும் கூறினார். 

உடனே அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், இதுகுறித்து தீவிரமாக யோசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News