செய்திகள்
அஸ்கர் ஆப்கன்

பயிற்சி ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் லெவன் அணி

Published On 2019-11-05 10:34 GMT   |   Update On 2019-11-05 10:34 GMT
லக்னோவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் லெவன் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • வெஸ்ட் இண்டீஸ் 38.5 ஓவரில் 156 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்
  • ஆப்கானிஸ்தா லெவன் 34.5 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து சேஸிங் செய்தது
  • ரஹ்மத் ஷா 47 ரன்கள், அஸ்கர் ஆப்கன் 33 ரன்

ஆப்கானிஸ்தான் இந்தியாவில் உள்ள மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று வகை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தத் தொடர் லக்னோவில் நாளை தொடங்குகிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்னோட்டமாக நேற்று ஆப்கானிஸ்தான் லெவன் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆப்கானிஸ்தான் லெவன் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் சுருண்டது.

அந்த அணி 38.5 ஓவர்களே தாக்குப்பிடித்தது. ராஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 41 ரன்கள் அடித்தார். லெவின் 24 ரன்களும், பூரண் 20 ரன்களும், ஹோல்டர் 31 ரன்களும் சேர்த்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன்-உல்-ஹக், ஷராபுதீன் அஷ்ரஃப் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. ரஹ்மத் ஷா (47), நஜிபுல்லா ஜத்ரான் (40), அஸ்கர் ஆஃப்கன் (33) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 34.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.
Tags:    

Similar News