செய்திகள்
ஏர் இந்தியா

இருக்கைகளில் எறும்புகள் அணிவகுப்பு - பூடான் இளவரசர் செல்ல இருந்த விமானம் ரத்து

Published On 2021-09-06 17:42 GMT   |   Update On 2021-09-06 17:42 GMT
விமான இருக்கைகளில் எறும்புக் கூட்டம் அணிவகுத்துச் சென்றதால் விமான சேவை ரத்துசெய்யப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா (ஏ.ஐ.-111) விமானம் ஒன்று லண்டன் புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பூடான் இளவரசர் வர்த்தக வகுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில், விமானத்தில் இருக்கைகளில் எறும்புகள் அணிவகுத்துச் சென்றுள்ளன. இதைக் கண்ட பயணிகள் இந்த விவகாரத்தை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதன்பின், பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மாலை 5.22 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.
Tags:    

Similar News