செய்திகள்
சதமடித்த ரகானே

ராஞ்சி டெஸ்டில் ரகானே அபார சதம் - இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 357/4

Published On 2019-10-20 06:25 GMT   |   Update On 2019-10-20 06:25 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரகானே சதமடித்து அசத்த, இந்தியா உணவு இடைவேளையில் 4 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.
ராஞ்சி:

இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 

இதற்கிடையே, 3-வது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 58 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 117 ரன்களும், ரகானே 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ரோகித் சர்மாவும், ரகானேவும் தங்களது அதிரடியை தொடங்கினர். 
ரகானே தனது 6வது சதத்தை அடித்து அசத்தினார். ரகானே 115 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு முனையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இரட்டை சதத்தை நோக்கி ஆடி வருகிறார்.

இரண்டாம் நாளின் மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 199 ரன்னுடனும், ஜடேஜா 15 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 2 விக்கெட்டும், நோர்ஜே, ஜார்ஜ் லிண்டே  தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Tags:    

Similar News