ஆன்மிகம்
குழந்தை வரம் அருளும் கரும்பு தொட்டில் வழிபாடு

குழந்தை வரம் அருளும் கரும்பு தொட்டில் வழிபாடு

Published On 2021-04-02 05:48 GMT   |   Update On 2021-04-02 05:48 GMT
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் புத்தம் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து அதை கரும்பு தொட்டில் கட்டி குழந்தையை அதில் வைத்து நிலக்கோட்டை முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள்.

பின்னர் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதையடுத்து தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் ஒப்படைத்து காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கரும்புகள் பெருகிய வண்ணம் இருக்கிறது.

இதுகுறித்து கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் கூறும்போது, அம்மனின் அருளால் ஆண்டுதோறும் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்கள்.
Tags:    

Similar News