லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு வரும் சந்தேகத்தை தீர்ப்பது எப்படி?

குழந்தைகளுக்கு வரும் சந்தேகத்தை தீர்ப்பது எப்படி?

Published On 2021-09-30 08:32 GMT   |   Update On 2021-09-30 08:32 GMT
குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் நகரும் பொழுது, அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வது நல்லது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் காலம் போய் இப்பொழுது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கற்றுக்கொடுக்கும் காலம் வந்து விட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருக்கலாம் அல்லது பிறக்கும் குழைந்தகளின் அறிவு திறன் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாலும் அவர்களுக்கு மிக அதிக அளவில் தகவல்கள் பரிமாறப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் தனக்கான உணவு வேண்டும் என்று தனது அழுகையால் தனது தாய்க்கு தெரிவிக்கிறது.

அதே சமயம் தனது சேயின் அழுகுரல் கேட்கும் பொழுது தாயின் மார்பிலிருந்து பால் உடனே சுரக்கும்., இது ஒரு அற்புத நிகழ்வாகும். ஒரு வயது முதல் மூன்று வயதுக்குள் குழந்தைகள் பேசக்கற்றுக்கொள்கிறது, உரையாடல்களை கவனிக்கிறது, தனக்கு வேண்டியதை கேட்டு பெற்றுக்கொள்கிறது.

பிறகு வளர வளர தனது சுற்றுசூழலுக்கேற்ப தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். தனக்கு கிடைக்கும் தகவல்களை கூர்மையாக கவனித்து பெற்றோர்களிடம் இருந்து தனது கேள்விக்கான உண்மையான பதிலை எதிர்பார்க்கிறது. இது மாதிரியான சமயங்களில் பெற்றோர்கள் உண்மையான பதிலுக்கு பதிலாக எதையாவது சொல்லி தப்பிக்கும் பொழுது குழந்தைகள் கூகுளை நாடுகிறது.

நாம் வளர்ந்த காலங்களில் நமது சிநேகிதர்களிடத்தில் நமது சந்தேகங்களை கேட்போம். ஆனால் இப்பொழுது ஸ்மார்ட் ஃபோன் காலம், இரண்டு வயது குழந்தைகள் கூட இதை பயன்படுத்துகிறது. இதில் வாட்ஸாப் வீடியோ பார்த்து குழந்தைகள் அதிகப்படியான தகவல்களை பெறுகிறது. கோழிகளுக்கு ஊசி போடுகிறார்கள் ஆகையால் கோழிக்கறி சமைக்க வேண்டாம் என்று பச்சிளம் குழந்தைகள் தன் அம்மாவிடம் சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

இது ஒரு வகையான ஆரோக்கியத்திற்கு நன்மையான விஷயம் என்றாலும் அவர்களுக்கு புரியும் படியாக எதற்காக ஊசி போடுகிறார்கள் மற்றும் நாட்டுக்கோழி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையையும் தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து நேர்மறையான வார்த்தைகளை கேட்கும் பொழுது அதிக கவனம் செலுத்துகிறார்கள். குழந்தைகளை அன்புடன் பாராட்ட வேண்டும், அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் சீரான வகையில் புரிய வைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் நேர்மறை கருத்துக்களை விட எதிர்மறையான கருத்துக்களை வழங்குவதுதான் சரி என்று நினைக்கிறார்கள்., இது தவறாகும்.

விஸ்பர், காண்டம் போன்ற விளம்பரங்களை பார்க்கும் பொழுது குழந்தைகள் நிறைய சந்தேகங்களை கேட்கும், ஆகையால் அந்த அந்த வயத்துக்கேற்ப பெற்றோர்கள் அவர்களுக்கு சில விளையாட்டுகள் மூலம் புரிய வைக்கலாம் அல்லது ஒரு கதை சொல்லி அதிலிருந்து அவர்களையே கேள்வி கேட்டு மீதி கதையை சொல்லும் படி புரிய வைக்கலாம். சில சமயங்களில் அவர்கள் தனது வயதுக்கு மீறிய கேள்வியை கேட்கலாம், அப்பொழுது பெற்றோர்கள் அவர்களது கேள்வியை நிராகரிக்காமல், அவர்களின் வயதிற்கேற்ப பதிலை சொல்லி புரிய வைக்கலாம்.

இது மாதிரியான நம்பிக்கையான நிகழ்வுகள் அவர்களுக்கு நிகழும் பொழுது குழந்தைகள் வேறு எங்கும் அந்த தகவலை தேட முயற்சிக்காமல் இருப்பார்கள்.
தனிப்பட்ட சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைக்கு எந்த வயதில் உள்ளாடை அனிய வேண்டும் என்றும், சேனிட்டரி நாப்கினை எப்படி கையாள வேண்டும் என்பதை புரிய வைக்க வேண்டும்.

ஆண் குழந்தைகளுக்கு விந்து வெளியேறும் பொழுது , இது ஒரு சாதாரண உடலியல் மாற்றங்கள் என்று புரியவைக்கலாம். சில குழந்தைகளுக்கு பருவமடைதல் தாமதமாகலாம், அவர்களுக்கு ஏன் தாமதமாகிறது என்று மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யலாம். பின் இதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கலாம்.
நல்ல தொடுதல் கெட்ட நோக்கத் துடன் கூடிய தொடுதலை விளக்கும் பொழுது குழந்தைகள் எதற்காக அந்த உறுப்புகளை தொடக்கூடாது என்று கேட்கக்கூடும், அப்பொழுது நாம் அவர்களுக்கு இப்படி புரிய வைக்கலாம் “ உனது பொம்மை எப்படி உன்னு டையதோ அதே மாதிரி உன்னுடைய உறுப்புகள் உன்னுடையது. உனக்கு நம்பகமான அம்மா கேட்கும் பொழுது எப்படி நீ உன் பொம்மையை தருகிறாயோ அதே மாதிரி உன் அம்மாவுக்கு உன் உறுப்புகளை தொட அனுமதிக்கலாம், அதே மாதிரி உன் டாக்டர், உன் அப்பா, அம்மா, அல்லது காப்பாளரை அனுமதிக்க வேண்டும்.

வயதுக்கு வருவது என்றால் என்ன? குழந்தை எப்படி பிறக்கிறது? இது போன்ற கேள்விகள் கேட்கும் பொழுது எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது என்று பெற்றோர்கள் திணறுவார்கள். பாலியல் பற்றிய ஆர்வம், உடலை பற்றி கற்றுக்கொள்ள ஒரு இயற்கையான வழியாகும். பாலியல் கல்வி குழந்தைகளுக்கு தன் உடலை பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது மற்றும் அவர்களின் சொந்த உடல்கள் பற்றி நேர்மறையாக உணர உதவுகிறது. இளம் குழந்தைகள், பெண்கள் எப்படி கர்ப்பம் அடைகிறார்கள் மற்றும் குழந்தை எப்படி பிறக்கிறது என்று தெரிந்து கொள்வதில் தான் ஆர்வமாக இருப்பார்கள் மற்றபடி பாலியல் பற்றி அல்ல.

குழந்தைகளுக்கு முதலில் உடலின் அனாட்டமியை புரிய வைக்க வேண்டும், பின்பு படி படியாக, பூப்பெய்வதை பற்றியும் , குழந்தை எப்படி பிறக்கிறது என்றும் புரிய வைக்கலாம். இதற்கு உதாரணமாக செடி எப்படி வளர்கின்றது எப்படி காய் கனிகளை தருகிறது என்று அவர்களுடன் கலந்துரையாடலாம். நீங்கள் எப்படி உணறுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு சைகையின் மூலம் வெளிப்படுத்துங்கள்., புன்னகை பூத்தல், தோள்பட்டையை அசைத்தல், கண் சிமிட்டல், கட்டுப்பிடி வைத்தியம், அவர்களுடன் சிரிக்கலாம் (அவர்களை பார்த்து அல்ல) இது மாதிரியான அங்கீகாரத்தை குறிக்கும் சமிக்ஞை அல்லது சைகை செய்யலாம்.

நேருக்கு நேர் தனிமையில் குழந்தையுடன் -உரையாடுவதற்கான நேரத்தை உருவாக்கவும்; உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் வயது இடைவெளி இருந்தால் இது மிகவும் முக்கியம். இதற்கு காரணம், இளைய குழந்தைக்கு மூத்த குழந்தையின் முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். அவர்களுடைய ஆர்வத்தைத் கவனியுங்கள், “ஆன்லைனில் ஆபாசம் என்பது இப்பொழுது பார்ப்பது உகந்ததல்ல, அதில் காதல் இல்லை , ரொமான்ஸ் இல்லை, அது செக்ஸ் பற்றிய தவறான கருத்தை உங்களுக்கு வழங்கலாம்.

நீங்கள் செக்ஸ் பற்றி மேலும் அறிய விரும்பினால், நான் சில புத்தகங்களை உங்களிடம் தருகிறேன், நாம் இருவரும் அதை பார்த்து விவாதிக்கலாம் அல்லது உனக்கு எதாவது கேள்விகள் இருந்தால் மேலும் மேலும் விவாதிக்கலாம். “ அல்லது உங்கள் பிள்ளை இன்னும் தீவிரமாக இது மாதிரியான தலைப்புகளை ஆராய விரும்பினால், நீங்கள் இப்படி புரிய வைக்கலாம் : “குழந்தைகளுக்காகவே வழங்கப்படும் நிகழ்வுகள் பதிவிடம் search engine ™ news sources இருக்கா என்று பார்க்கலாமா ? “ Ex: Kiddle, kidrex, YouTube kids, etc.,.,

உங்களுக்கு சில தகவல்கள் தெரியாதபோது, அதை ஒப்புக்கொள்ளுங்கள். குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் நகரும் பொழுது, அவர்களுடைய பெற்றோர்களுக்கு எல்லா பதில்களும் தெரிந்திருக்க அவசியம் இல்லை என்று அவர்கள் புரிந்து கொள்வது நல்லது. “எனக்கு தெரியாது, இன்னும் கண்டு பிடிக்க முயற்சி செய்வோமா ? “ என்று நீங்கள் பரிந்துரைக்கலாம். பெற்றோர்களுக்கு மரியாதை செலுத்தும் தருணம் இது, ஏன் என்றால் அவர்கள் அடுத்த தலைமுறையை உயர்த்துவதற்காக கடினமாக உழைக்கிறார்கள் !!

Vandhana.acha@gmail.com
Tags:    

Similar News