செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

மும்பையில் நடைபெற்ற சம்பவம் என கூறி வைரலாகும் வீடியோ

Published On 2021-02-26 05:18 GMT   |   Update On 2021-02-26 05:18 GMT
மும்பையில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


மும்பை காவல் துறையினர் பட்டப்பகலில் ஒரு குழுவை கைது செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையின் தெற்கு பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்கின்றனர் எனும் தலைப்பில் வீடியோ பகிரப்படுகிறது.

ஒரு நிமிடம் 27 நொடிகள் ஓடும் வீடியோவில் மூன்றும் போலீஸ் வாகனங்கள் கட்டிடம் ஒன்றின் முன் வந்து நிற்கிறது. உடனே அதில் இருந்து சில போலீசார் வெளியேறி, கட்டிடத்தினுள் இருந்த சிலரை வலுக்கட்டாயமாக இழுத்து செல்கின்றனர். பின் அங்கிருந்து வாகனங்கள் வேகமாக வெளியேறுகின்றன.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அது மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள பைதோனி எனும் இடத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு காட்சிகள் என தெரியவந்துள்ளது. இது இணைய தொடர் ஒன்றுக்காக பிப்ரவரி 14 ஆம் தேதி படமாக்கப்பட்ட காட்சி ஆகும். 

உண்மையில் இதுபோன்ற சம்பவம் எதுவும் மும்பையில் நடைபெறவில்லை. பைதோனி காவல் துறை அதிகாரிகளும் அந்த வீடியோ இணைய தொடர் ஒன்றுக்காக படமாக்கப்பட்ட காட்சிகள் என்பதை உறுதி செய்து இருக்கின்றனர். வீடியோவில் இருப்பவர்கள் யாரும் உண்மையான போலீஸ் அதிகாரிகள் இல்லை என்றும் போலீசார் உறுதி செய்தனர்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News