செய்திகள்
மஞ்சி

பீகாரின் புதிய அரசில் மந்திரி பதவியை ஏற்க மாட்டேன் - முன்னாள் முதல்-மந்திரி மஞ்சி அறிவிப்பு

Published On 2020-11-13 00:59 GMT   |   Update On 2020-11-13 00:59 GMT
பீகாரின் புதிய அரசில் மந்திரி பதவி எதுவும் தனக்கு வேண்டாம் எனவும், அதை ஏற்க மாட்டேன் எனவும் முன்னாள் முதல்-மந்திரி மஞ்சி தெரிவித்தார்.
பாட்னா:

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். இந்த கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன்ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 4 இடங்களை வென்றது.

இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் நேற்று மஞ்சியின் இல்லத்தில் கூடினர். அப்போது கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக மஞ்சியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சி, பீகாரின் புதிய அரசில் மந்திரி பதவி எதுவும் தனக்கு வேண்டாம் எனவும், அதை ஏற்க மாட்டேன் எனவும் கூறினார்.

மேலும் நிதிஷ்குமாரின் வளர்ச்சி திட்டங்களுக்கும், காங்கிரசின் திட்டங்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்பதால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Tags:    

Similar News