செய்திகள்
தடுப்பூசி மருந்து

இந்தியாவில் முக்கிய நகரங்களில் கிடைக்கும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

Published On 2021-06-17 09:39 GMT   |   Update On 2021-06-17 09:39 GMT
தற்போது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி குறிப்பிட்ட அளவு மட்டுமே சப்ளை செய்யப்படுவதால், பொதுமக்கள் கோவின் இணையதளம் மூலம் பதிவு செய்து பயனடைய முடியாது.
புதுடெல்லி:

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், உள்நாட்டில் தயாரித்து விற்பனை செய்யவும் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டா டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக தடுப்பூசியை குறிப்பிட்ட அளவுக்கு இறக்குமதி செய்து, கடந்த மே 14ம் தேதி முதல் ஐதராபாத்தில் மட்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

தற்போது டெல்லி, விசாகப்பட்டினம், பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா, பட்டி(இமாச்சல்), கோலாப்பூர், மிர்யலகுடா (தெலுங்கானா) ஆகிய 9 நகரங்களுக்கு 
ஸ்புட்னிக்-வி
 தடுப்பூசி பயன்பாட்டை விரிவுபடுத்தி உள்ளது. இந்த நகரங்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சில நகரங்களுக்கும் தடுப்பூசியை சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.



குறைந்த அளவிலான தடுப்பூசிகளே தற்போது பயன்பாட்டில் இருப்பதால், பொதுமக்கள் கோவின் இணையதளம் மூலம் பதிவு செய்து பயனடைய முடியாது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில், வணிக ரீதியான விற்பனை தொடங்கும். அப்போது, கோவின் இணையதளம் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து தடுப்பூசியை செலுத்த முடியும் என டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் கூறி உள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 91.6 சதவீத செயல்திறன் கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளில் இதுதான் அதிக செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News