தொழில்நுட்பம்
டொனால்டு டிரம்ப்

டிக்டாக்குடனான ஒப்பந்தம் இந்த மாதிரி இருக்க வேண்டும் டொனால்டு டிரம்ப் தகவல்

Published On 2020-08-14 06:52 GMT   |   Update On 2020-08-14 06:52 GMT
டிக்டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.


சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக்-குக்கு பிறகு டிக்டாக் செயலியை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிக்டாக் செயலியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது.

சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என்று டிக்டாக் நிறுவனம் தொடர்ந்து  கூறி வருகிறது.  



எனினும், இதை ஏற்க மறுத்த அமெரிக்கா,தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி டிக்டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளது. செப்டம்பர் மாதத்தின் 15 ஆம் தேதிக்குள்  டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். 

தடையை தவிர்க்கும் வகையில் டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மைக்ரோசாப்ட் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் டிக்டாக்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில், அமெரிக்க நிறுவனத்துடன் விற்பனை செய்ய, டிக்டாக்  செய்து கொள்ளும் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு நீடித்த பலன் அளிக்கும் வகையிலும் முழு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News