செய்திகள்
தீபக் ஹூடா, குருணால் பாண்ட்யா

சக வீரர்கள் முன் அவமானப்படுத்தினார்: குருணால் பாண்ட்யா மீது தீபக் ஹூடா குற்றச்சாட்டு

Published On 2021-01-10 11:27 GMT   |   Update On 2021-01-10 11:27 GMT
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டி தொடங்குவதற்கு முன் பரோடா அணியில் இருந்து விலகிய தீபக் ஹூடா, அந்த அணியின் கேப்டன் குருணால் பாண்ட்யா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இந்தத் தொடரில் விளயைாடுவதற்கான ரஞ்சி டிராபி அணிகள் தயாராகி வந்தன. இந்த நிலையில்தான் பரோடா அணியில் இடம் பிடித்திருந்த பேட்ஸ்மேன் தீபக் ஹூடா அணியில் இருந்து வெளியேறுவதாக பரோடோ கிரிக்கெட் சங்கத்திற்கு கடினம் எழுதியுள்ளார்.

பரோடா அணியின் கேப்டன் குருணால் பாண்ட்யா, சக வீரர்கள் முன் அவமானப்படுத்தியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

தீபக் ஹூடா அந்தக் கடிதத்தில் ‘‘தற்போயை நிலையில், நான் மிகச்சோர்வாகவும், நெருக்குடிக்கு உள்ளாகியும் இருக்கிறேன். கடந்த சில நாட்களாக, குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில், என்னுடைய அணி கேப்டன் குருணால் பாண்ட்யா, சக அணி வீரர்கள் முன் வைத்து என்னை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார். வதோதராவில் உள்ள ரிலையன் மைதானத்தில் மற்ற அணி வீரர்களும் இருக்கும் நிலையில் அதையே செய்தார்.

எப்படி பரோடா அணிக்காக விளையாடுகிறாய்? என்று பார்ப்போம் என மிரட்டினார். இந்த தேதி வரை என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்தது கிடையாது’’ என்றார்.
Tags:    

Similar News