உள்ளூர் செய்திகள்
உடன்குடி கிராம ஊராட்சி தலைவர்களுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார்.

உடன்குடி ஒன்றிய கிராம ஊராட்சி தலைவர்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை

Published On 2022-01-28 09:43 GMT   |   Update On 2022-01-28 09:43 GMT
உடன்குடி ஒன்றிய கிராம ஊராட்சி தலைவர்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து கலந்துரையாடினர்.
உடன்குடி:

உடன்குடி ஒன்றியம் கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் செட்டியாபத்து பாலமுருகன், வெள்ளாளன்விளை ராஜரத்தினம், செம்மறிகுளம் அகஸ்டா, மெஞ்ஞானபுரம் கிருபா, சீர்காட்சி  கருணாகரன், நயினார்பத்து அமுதவல்லி, லட்சுமிபுரம் ஆதிலிங்கம் ஆகியோர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வைத்து கலந்துரையாடல் நடத்தினர்.

அவர்களிடம் அமைச்சர் கோரிக்கைகளை கேட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே போன் மூலம் தொடர்பு கொண்டு விபரம்கேட்டு பதில் கூறினார். மின்சாரம், குடிநீர், வீட்டுதீர்வை உட்பட பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது. பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

கிராம மக்களின் கோரிக்கைகளை உடனுக்கு உடன் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அடிப்படை தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

மக்கள் பணி செய்வதற்குத்தான் மக்களால் நாம் தேர்வு செய்யப்பட்டுள்ளேம்.  என்பதை மனதில் வைத்து பணி செய்ய வேண்டும், மக்கள் பணி செய்வதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Tags:    

Similar News