செய்திகள்
கோப்புபடம்

மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 860 ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

Published On 2021-04-18 02:38 GMT   |   Update On 2021-04-18 02:38 GMT
கொரோனா வைரஸ் பரவல் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
போபால்:

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. வைரஸ் பரவல் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. 

அதேபோல், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்பாட்டிற்கான உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்துக்கும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ரெம்டெசிவிர் சட்டவிரோதமாக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுகிறது.

இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 860 ரெம்டெசிவிர் மருந்து நேற்று மர்மநபர்களால் திருடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் இருந்த 860 ரெம்டெசிவிர் மருந்துகளை திருடிச்சென்றது யார்? என்பது குறித்து் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News