செய்திகள்
நிஷாகந்தி பூ

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் நிஷாகந்தி பூ

Published On 2021-06-11 09:00 GMT   |   Update On 2021-06-11 14:01 GMT
மருத்துவ குணம் நிறைந்த பூவாக பயன்படுகிறது . ஒரு இலையிலேயே பல பூக்கள் பூப்பதும் உண்டு.
உடுமலை:

நிஷாகந்தி பூ மாலை 7 மணிக்கு மலர தொடங்கி அதிகாலை 4 மணிக்கு வாடிவிடும். விஷ்ணு படுக்கையில் இருப்பது போல் தோற்றம் இருப்பதால் இது ஆனந்த சயனபூ என்று அழைக்கப்படுகிறது. நறுமணம் என பொருள்படும் நிஷாகந்தி பூ மலையாள இலக்கியங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த பூவானது  மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே   பூக்கும்.

தற்போது இந்தப்பூ  உடுமலையை சேர்ந்த  நூலகர் கணேசன் வீட்டில் பூத்துள்ளது. கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக வீட்டில்  நிஷாகந்தி பூ செடி வைத்து பூச்செடியை வளர்த்து வருகிறார். கணேசன் கூறுகையில், இந்த பூ பூக்க துவங்கியதுமே நல்ல நறுமணம் வீச தொடங்கி விடும். மிகுந்த வெண்மை நிறத்துடன் காணப்படும். அதிகாலை 4 மணி வரைக்கும் மலர்ந்த நிலையில் இருக்கும்.

பின்னர் அது வாடிவிடும். மருத்துவ குணம் நிறைந்த பூவாக பயன்படுகிறது. ஒரு இலையிலேயே பல பூக்கள் பூப்பதும் உண்டு.  இதை வீடுகளில் வளர்ப்பதும் எளிது. சிறு இலையை நட்டாலே அதில் இருந்து நிறைய செடிகள் கிடைக்கும் என்றார்.
Tags:    

Similar News