செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

திருப்பூருக்கு பிரேமலதா விஜயகாந்த் நாளை வருகை

Published On 2021-01-09 01:15 GMT   |   Update On 2021-01-09 01:15 GMT
திருப்பூருக்கு நாளை வரும் பிரேமலதா விஜயகாந்த் மாற்றுக்கட்சியினர் தே.மு.தி.க.வில் இணையும் விழாவில் பங்கேற்கிறார்.
திருப்பூர்:

திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர்கள் ஆலோசனைகூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க. மாநில துணைச்செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான பார்த்தசாரதி, தேர்தல் பணிக்குழு செயலாளர் சிங்கை சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், வடக்கு மாவட்ட செயலாளர் குமாரசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் குப்புசாமி மற்றும் நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கட்சியின் துணைச்செயலாளர் பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தை ஏழு மண்டலமாக பிரித்து தலைமை கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மண்டல பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது என தொகுதி வாரியாக, மாவட்ட வாரியாக, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி வாரியாக ஊழியர் கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மாவட்டம், தொகுதி வாரியாக சென்று கூட்டம் நடத்தப்பட உள்ளது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுக்குழுவின் முடிவில் கூட்டணியா? கூட்டணி இல்லையா? என்பது குறித்து தெரியவரும். நாங்களும் மறைமுகமாக எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கூட்டணியில் பேசி இருக்கிறோம்,

நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூருக்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் வருகிறார்கள். அவர்கள் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி தே.மு.தி.க.வில் இணைய உள்ளனர். கூட்டணிப்பேச்சுவார்த்தை முடிந்த பிறகு எங்கள் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம். தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவோம். கடைசி கட்டத்தில் தலைவர் விஜயகாந்த் மண்டலம் வாரியாக பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News