செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாநகராட்சியில் 67 முகாம்களில் 16 ஆயிரத்து 315 பேருக்கு தடுப்பூசி

Published On 2021-09-13 08:16 GMT   |   Update On 2021-09-13 08:16 GMT
ஈரோடு மாநகராட்சியில் நடந்த 67 முகாம்களிலும் மொத்தம் 16 ஆயிரத்து 315 பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஈரோடு:

தமிழகம் முழுவதும் நேற்று மெகா முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

இதில் ஈரோடு மாநகராட்சியில் மட்டும் 67 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி நல அதிகாரி டாக்டர் முரளி சங்கர் மற்றும் சுகாதார அதிகாரிகள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் இந்த முகாம்களில் தடுப்பூசிகள் போட்டனர்.

வாக்குச்சாவடி மையங்கள், பொது இடங்கள் என பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது. அத்துடன், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் வரவழைக்கப்பட்டு ஊசி போடப்பட்டது.

இந்த முகாம்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமேலாண்மை இயக்குனரும், ஈரோடு மாவட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியுமான வி.தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் ஆர்.கே.வி. ரோடு மாநகராட்சி பூங்கா, இடையன்காட்டு வலசு பள்ளிக்கூடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டனர்.

ஈரோடு மாநகராட்சியில் நடந்த 67 முகாம்களிலும் மொத்தம் 16 ஆயிரத்து 315 பேர் நேற்று ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
Tags:    

Similar News