ஆன்மிகம்
கரும்பாட்டூர் நாராயண சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தொடங்கியது

கரும்பாட்டூர் நாராயண சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தொடங்கியது

Published On 2020-12-12 03:29 GMT   |   Update On 2020-12-12 03:29 GMT
கரும்பாட்டூர் நாராயண சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.
கரும்பாட்டூர் நாராயண சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சர விளக்கு பணிவிடையும், காலை 6 மணிக்கு திருக்கொடி பட்டம் கோவில் வலம் வருதலும், காலை 7 மணிக்கு திருக்கொடி ஏற்றமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பும் தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வாகனத்தில் கோவில் வலம் வருதலும், தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பும், வாகன பவனியும், அன்னதர்மமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் துரை, துணைத்தலைவர் சேகர், பொருளாளர் ஜி. கண்ணன், உதவி பொருளாளர் எம். கண்ணன், செயலாளர்கள் மணிகண்டராஜன், ரவி, கேசவன் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News