ஆன்மிகம்
அன்னாபிஷேகம்

சிவன் கோவில்களில் நடந்த அன்னாபிஷேகம்: சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

Published On 2020-11-01 03:47 GMT   |   Update On 2020-11-01 03:47 GMT
திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதில் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்மணி நாளில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். சிவபெருமானால் படைக்ககூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கக்கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி நாள்அமைகிறது. ஆகவே சிவபெருமான் எழுந்தருளும் அனைத்து கோவில்களிலும் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கருவறையில் உள்ள 5 சன்னதிகளில் சத்தியகிரீஸ்வரருக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.

இதேபோல சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் மலைமேல் உச்சியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடந்தது. மேலும் பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் 7 படி அரிசியாலான அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல பாண்டி நகரிலுள்ள கல்யாண விநாயகர் கோவிலில் காசி விஸ்வநாதருக்கும், பசுமலை தியாகராஜா காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் பிரதோஷ சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அங்கும் பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சிவபெருமானின் தரிசனம் செய்தனர். இங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News